புதன், ஜனவரி 16, 2013

பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள பேஸ்புக் !!

இங்கிலாந்தில் மட்டும் சுமார் 6 லட்சம் பேஸ்புக் பயனாளர்கள் தளத்திலிருந்து விலகி வருவதால், பேஸ்புக் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் பயனாளர்களின் சொந்த தகவல்கள் அதிகளவு வேறு பயனாளர்களால் திருடப்படுவதும், பின்னர் அவை வர்த்தக நோக்கில் களவாடப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. எனவே தங்களது இரகசிய காப்புரிமை பறிபோவதாக பயனாளர்கள் கருதுவதால், தளத்திலிருந்து விலகுகின்றனர்.
ஆனால் இத்தகவலை மறுத்துள்ள பேஸ்புக், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும் பேஸ்புக் தளத்தில் லாக் ஆன் செய்கின்றனர் என்று அறிவித்துள்ளது. இங்கிலாந்து உலகின் ஆறாவது அதிகபட்ச பேஸ்புக் பயனாளர்கள் இருக்கும் நாடு. டிசம்பரில் மட்டும் 33 மில்லியன் தனிநபர் பயனர்கள் அதிகரித்துள்ளனர் என பேஸ்புக் தளத்தின் இங்கிலாந்து ஊடகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், ஒவ்வொரு மாதமும் அமெரிக்காவில் 169 மில்லியன் பயனாளர்களும், பிரேசிலில் 65 மில்லியன் பேரும், இந்தியாவில் 63 மில்லியன் பேரும் அதிகரித்து வருகின்றனர். சந்தை பயன்பாட்டில் அமெரிக்காவின் 54 சதத்துக்கு அடுத்து, பிரிட்டன் தான் 53 சதமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக