செவ்வாய், ஜனவரி 22, 2013

சுனில் ஜோஷி தலைமையிலான ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலின் முதல் தாக்குதல் 2001-ஆம் ஆண்டு நடந்தது – என்.ஐ.ஏ!

புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில்ஜோஷி தலைமையிலான ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலின் தாக்குதல் 2001-ஆம் ஆண்டே துவங்கியதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் உள்ள நிர்மலா மருத்துவமனையில் பணியாற்றிய லீனா என்ற கன்னியாஸ்திரி பெண் மீது துப்பாக்கியால் சுட்ட வழக்குதான் அந்த சம்பவம். இதை நடத்தியது சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மலேகான் குண்டுவெடிப்புகளில் குற்றவாளிகளான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ராஜேந்தர்
சவுத்ரியும், லோகேஷ் குமாரும் ஆவர். ஆனால், குறி தவறியதால் காயத்துடன் லீனா உயிர்தப்பினார். தாக்குதலின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் இருப்பதாக கிறிஸ்தவ அமைப்புகள் புகார் அளித்தும் மத்தியபிரதேச போலீஸ் குற்றவாளிகளை கைது செய்யாமல் அலட்சியப்படுத்தியது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் பைக்கில் வந்ததாகவும், கண்டால் அடையாளம் காணமுடியும் எனவும் லீனா போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தார். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதி சவுத்ரி கடந்த டிசம்பரில் கைதானதை தொடர்ந்து 11 ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
துவக்கத்தில் சிறுபான்மையினர் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலுக்கு பாபரி மஸ்ஜிதை இடித்தது ஊக்கத்தை அளித்தது. சுனில் ஜோஷியின் உத்தரவின் பேரில் இக்கும்பல் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையிலும் பங்கேற்றது. ஏராளமானோரை லோகேஷ் குமார் அங்கு கொலைச் செய்தான். 2004-ஆம் ஆண்டு உஜ்ஜையினில் நடந்த கும்பமேளாவில் வைத்து சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூருடன் நடத்திய சந்திப்புகளை தொடர்ந்து தாக்குதல்கள் தீவிரம் அதிகரித்தது.
2004-ஆம் ஆண்டு ஜம்மு-கஷ்மீரில் மஸ்ஜித் மீது நடந்த க்ரேனேடு தாக்குதல், பேராசிரியர் கிலானி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உள்பட முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களான மஸ்ஜிதுகள், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குண்டுவெடிப்புகளை கட்டவிழித்துவிட்டனர்.
ரகசியத்தை கசிய விட்டதும், மதுபான வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும் சுனில்ஜோஷியை கொலைச் செய்த ஹிந்துத்துவா கும்பலுக்கு ராம்ஜி கல்சங்கராவும், சந்தீப் டாங்கேயும் தலைமைப் பொறுப்பை ஏற்றனர். ஆனால், இவர்கள் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் இடைநிலைக்காரர்கள் மட்டுமே. இவர்கள் பிடிபட்டால் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் முக்கிய நபர்கள் யார் என்பது தெரியவரும்.
1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக