பிரிட்டனில் உள்ள ஒருவர், தன்னுடைய உடலில் 15 இடங்களில் உடைந்த எலும்புகளுக்காக 34 இடங்களில் அறுவை சிகிச்சை செய்ததோடு, மாரடைப்பு நோயையும் சந்தித்து, சிறுநீரக கோளாருடன் அதிசயமாக உயிர் வாழ்ந்து வருகிறார். அவரது உடலில் செயல்பாடுகளைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர். Terry White என்ற 67 வயது பிரிட்டன் மனிதர், தன்னுடைய இடுப்பில் ஆறு இடங்களில் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். உடலின் பல்வேறு இடங்களில் உடைந்துள்ள 15 எலும்புகளை ஒன்று சேர்ப்பதற்காக 34 முறை அறுவைசிகிச்சை செய்துள்ளார். இதுமட்டும் போதாது என்று அவருக்கு அடிக்கடி மாரடைப்பும் வருமாம். இதுவும் போதாதென்று சிறுநீரகமும் வேலை செய்யாமல் பழுதடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதைக் கண்டு, மருத்துவர்களே அதிசயிக்கின்றனர். இவருக்கு செய்யப்பட்ட 34 அறுவை சிகிச்சைகளில் 21 அறுவை சிகிச்சை மிகவும் கடினமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று மேஜர் அறுவை சிகிச்சைகள் 10 நாட்கள் இடைவெளியில்
மட்டுமே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் அனைத்து வெற்றி பெற்றதற்கு அவருடைய தன்னம்பிக்கையே பெரும் உதவியாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக