வியாழன், ஜனவரி 31, 2013

பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்யை கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

30 ஜனவரி, 2013 நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கண்டித்தும், குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் சங்கப்பரிவார அமைப்புகல் தான் என்று உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை ஆதரித்தும், சங்கபரிவார அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று 30.01.2013 மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில
தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால், திருவள்ளூர் மாவட்ட தலைவர் புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



" இந்நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களுக்கு மூல காரணமாக இருக்கக்கூடிய சங்கபரிவார அமைப்புகள் முதன் முதலாக தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்து தீவிரவாத கணக்கை துவக்கி வைத்தனர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட தினமான இன்று சங்கப்பரிவார அமைப்புகளின் தீவிரவாத செயல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காந்தியை கொலை செய்த சங்கப்பரிவார அமைப்புகள் இன்று வரை தமது தீவிரவாத செயல்களை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தடை செய்யப்பட வேண்டிய இந்த சங்கப்பரிவார அமைப்புகள் தொடர்ந்து தீவிரவாத செயல்களை நிகழ்த்தி வருகின்றன.



நாட்டில் நடந்த முக்கியமான குண்டுவெடிப்புகளுக்கு மூல காரணம் சங்கப்பரிவார அமைப்புகள் என்று உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த சங்கப்பரிவார அமைப்புகள் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய சுசில் குமார் ஷிண்டே அவர்களும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.



சங்கப்பரிவார அமைப்புகளின் சதிகளை கண்டறிந்து உள்துறை அமைச்சகம் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய காவி பயங்கரவாதம் எனப்படும் சங்கப்பரிவார அமைப்புகளின் செயல்பாடுகல் தடுத்து நிறுத்தப்படவில்லை. இது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை தருகிறது.



சங்கப்பரிவார அமைப்புகளை கண்காணிக்க வேண்டிய காவல்துறை முஸ்லிம் சமூகத்தை மட்டும் குறிவைத்து சுற்றி சுற்றி வருகின்றனர். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள காவி பயங்கரவாதம் தொடர்பான அறிக்கை மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதனை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். யு.ஏ.பி.ஏ சட்டத்தின்படி முஸ்லிம்கள் மீதும் நக்ஸல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் காவல்துறை காவி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?



உளவுத்துறையானது சங்கபரிவார் அமைப்புகளை தீவிரமாக கண்காணித்து பயங்கரவாத செயல்களிலிருந்து நம் தேசத்தை பாதுகாக்க முன்வர வேண்டும். இந்த கடமையும் பொறுப்பையும் உணர்ந்து மத்திய அரசு செயல்பட வேண்டும். சங்கப்பரிவார் அமைப்புகளின் தீவிரவாத செயல்களை கண்டித்து போராட்டம் நடத்தும் அமைப்புகளை குற்றவாளியாக காவல்துறை சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. எனவே இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களும், தலித்களும் ஒடுக்கப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், மதச்சார்பற்ற அமைப்புகளும் ஒன்றினைந்து காவி பயங்கரவாதத்திடமிருந்து தேசத்தை மீட்டெடுக்க ஓரணியில் திரள வேண்டும்.



காந்தியை கொலை செய்தபோதே இந்த சங்கப்பரிவார் அமைப்புகள் முழுமையாக தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த கால ஆட்சியாளர்கள் செய்ய தயங்கிதால் சங்கப்பரிவார அமைப்புகள் மீண்டும் மீண்டும் சதி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக சங்கப்பரிவார அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தெஹ்லான் பாகவி கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, தொகுதி, வட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.                                 1


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக