சென்னை: விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா செய்தது சரியே என்று மூத்த அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான சோ (ராமசாமி) கூறியுள்ளார். விஸ்வரூபம் திரைப்பட விவகாரத்தில், மாநில அரசு எடுத்த நடவடிக்கை சரியே, ஒரு அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று சோ கூறியுள்ளார். CNN IBN ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு சோகுறிப்பிட்டுள்ளார். மேலும் "பொதுமக்கள் நலன்
உள்ள பக்கமே முதல்வர் ஜெயலலிதா நின்றார். ஒரு திரைப்படம் சிலரது நம்பிக்கைகளுக்கு விரோதமாக இருக்கிறது என்றால், அந்தப் படத்தை தடை செய்வதில் தவறில்லை" என்றும் சோ கூறினார்.
2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக