வியாழன், ஜனவரி 31, 2013

ஜெயா டிவிக்குப் படத்தை விற்காததால் விஸ்வரூபத்திற்குத் தடையா?... ஜெ. விளக்கம் !

சென்னை: ஜெயா டிவிக்கு அடிமாட்டு விலைக்கு விஸ்வரூபம் படத்தை கமல்ஹாசன் விற்க முன்வராததால்தான் நான் படத்தைத் தடை செய்தேன் என்பது அபத்தமான குறறச்சாட்டு. ஜெயா டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். விஸ்வரூபம் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது...

 விஸ்வரூபம் விவகாரத்தில் என்னைத் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டி பேசி வருகின்றனர். நான் ஒரு தனியார் டிவிக்கு ஆதரவாக,அதாவது ஜெயா டிவிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக கூறுகிறார்கள். ஜெயா டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜெயா டிவியின் நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை. அது அதிமுகவின் ஆதரவு டிவி, அவ்வளவுதான். 

ஜெயா டிவி நிறுவனத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நிலையில் படத்தை அடிமாட்டு விலைக்கு ஜெயா டிவிக்கு விற்காகததால்தான் நான் கோபமடைந்து தடை செய்ததாக கூறுவது அபத்தானது, தவறானது. 

இப்படி என்னை ஜெயா டிவியுடன் இணைத்துப் புகார் கூறிப் பேசியவர்கள் மீதும், அதை செய்தியாக வெளியிட்டவர்கள் மீதும் நான் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார் ஜெயலலிதா.
2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக