வியாழன், ஜனவரி 31, 2013

வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும்: மன்மோகன் சிங் அறிவிப்பு !

பாலியல் பலாத்கார சட்டத் திருத்தம் தொடர்பான வர்மா  குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக குழுவின் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வர்மா மற்றும் உறுப்பினர்களான ஓய்வுபெற்ற நீதிபதி லீலா சேத் மற்றும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மன்மோகன் சிங் இதனை தெரிவித்துள்ளார். 

அதில் 30 நாள்களில் விரைவாக பரிந்துரையை அளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ள மன்மோகன் சிங்,"டெல்லி மாணவி கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பஸ்ஸில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார்.இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது.இந்நிலையில்,இது தொடர்பான சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அக்குழு பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தனது அறிக்கையை விரைவாக சமர்ப்பித்துள்ளது பாராட்டுக்குரியது.இக்குழுவினரின் பரிந்துரைகள் உடனடியாக ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்தக் கடிதத்தில் அவர் மேலும் கூறியுள்ளார்.                                                                                      1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக