வியாழன், ஜனவரி 24, 2013

இஸ்லாத்திற்கு எதிரான விஸ்வரூபம் படத்தை மலேசியாவில் தடை செய்ய பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் கிம்மா கோரிக்கை !(மேலும் புகைப்படங்கள் இணைப்பு)

இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரம் செய்வதை மேற்கத்திய நாடுகள் கொள்கையாக செய்து வருகின்றனர். இந்த வரிசையில் முகம்மது  நபி(ஸல்) அவர்களின் காட்ரூன் டென்மார்க் பத்திரிக்கையில் வெளியானது அதைத்தொடர்ந்து பல்வேறு பத்திரிகையில் கேலிச்சித்திரம் வெளிவந்தது. சமிபத்தில் வெளியான "INNOCENCET OF MUSLIMS" என்ற திரைப்படம் உலக மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியதுஅதை பின்பற்றி இந்தியாவிலும் பாலிவுட் படங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் எடுக்கும் பாணி பின்பற்றப்படுகிறது. இதை அவ்வபோது இந்தியவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும்மதச்சார்பற்ற
இயக்கங்களும் எதிர்த்து வருகின்றன. தமிழகத்தில் சமிபத்தில் திரைக்கு வந்த நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது. அதன் பிறகு அப்படத்தின் தவறான கட்சிகள் நீக்க பட்டது.விஜய் மற்றும் படக்குழுவினர் அனைவரும் பகிரங்க மன்னிப்பு கேட்டனர்.
             கமலின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் செயல்படும் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு இத்திரைப்படத்தை அவர்களுக்கு காட்டிய  பின்பே திரையிட வேண்டும் என்று அரசாங்கத்திற்கும்,கமலுக்கும் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் கடந்த 21.01.2013 அன்று காண்பிக்கப்பட்டது.
 படத்தை பார்த்த அக்குழுவினர் படத்தில் நிறைய துவேசமான ,முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமான காட்சிகள் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை  இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை அடுத்து இப்படத்தை வெளியிட தடை செய்யகோரி சென்னை கமிஷ்னர் மற்றும் தமிழக உள்துறை செயலாளர்   ஆகியோரிடம்  மனு அளித்தனர்.அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்படத்தை  தமிழகத்தில் வெளியிட இரண்டு வாரத்திற்கு  தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை முஸ்லிம்கள் நிரந்தர தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.இந்நிலையில் மலேசியாவில் இப்படம் இன்று திரையிடப்பட்டுள்ளது.இங்கும் இப்படத்தை திரையிட தடைவிதிக்க கோரி "கிம்மாவின் இளைஞர் அணித் தலைவர்"ஹாரிஸ் சிராஜுதீன்"  தலைமையில் டான்வாங்கி போலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரில் இத்திரைப்படத்தை திரையிட உடனே  தடை செய்ய கோரியும் மற்றும் இத்திரைப்படத்தை இங்குள்ள முஸ்லிம் அமைப்புகளிடம் காண்பித்து அதிலுள்ள தவறான காட்சிகளை நீக்கி திரையிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த "கிம்மாவின் தேசிய இளைஞர் அணித்தலைவர் "ஹாரிஸ் சிராஜுதீன்" அவர்கள் கூறுகையில் இத்திரைப்படத்தின் மூலமாக மாற்று மத சஹோதரர்கள் இஸ்லாத்தை தவறாக புரிந்து கொள்வார்கள் மற்றும் இது இஸ்லாத்தையும் , முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தும் விதமாகவும் மனதை புண்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது ,எனவே இதில் உடனடியாக உள்துறை அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.இந்நிகழ்வின் போது கிம்மாவின் தேசிய துணை தலைவர் .முகம்மது மோஃபின் ,தேசிய பொது செயலாளர் "அமீர் ஹம்சா" மற்றும் பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்களும் கிம்மாவின் இளைஞர் அணி செயல்வீரர்களும் உடனிருந்தனர்.
2






1 கருத்து:

  1. ஸ்வரூபம் கமலஹாசனின் பரிணாம வளர்ச்சி!

    Jan 24: நடிகர் திலகம் சிவாஜி கணேஷனுக்கு அடுத்து, தமிழ் சினிமா உலகின் தலை சிறந்த நடிகராக கமலஹாசன் தனது நடிப்பு திறமையை பல்வேறு படங்களில் வெளிப்படுத்தியவர்.

    உயர் ஜாதியை சேர்ந்த இவர், தன்னை கடவுள் மறுப்பாளராகவும், நடுநிலையாளராகவும், முற்போக்கு சிந்தனையாளராகவும் காட்டி கொண்டதன் மூலம், தமிழக மக்கள் பெரும்பான்மையினரின் நன்மதிப்பை பெற்ற நடிகர்.

    பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தவர். மும்பை கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து கண்ணீர் விட்டு, அதற்காக அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து பேசியவர் என்று சிறுபான்மை மக்களின் நண்பனாக தன்னை காட்டி கொண்ட கமலிடம் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள மாறுதல்கள்.

    மாறுதல்(1) ஹேராம் திரைப்படம்: இந்த படத்தில் முஸ்லிம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதால் தான் இந்து தீவிரவாதியாக மாற நேர்ந்ததாக ஒரு கருத்தை சொல்வார். இது உண்மைக்கு எதிரான திரிபுவாதம் இந்தியாவில் நடந்த கலவரங்களில் இந்து பெண்கள் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் இல்லை. அதேநேரம் முஸ்லிம் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். பேன்ற ஹிந்துத்துவா இயக்கங்களால் கூட்டமாக கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

    மாறுதல்(2): உன்னைப்போல் ஒருவன்: கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டு வைத்ததாக சொல்லியிருப்பார். இந்த மிகபெரிய வரலாற்று புரட்டை கமலஹாசன் அறியாமல் செய்திருப்பார் என்று சொல்ல முடியவில்லை.

    மாறுதல்(3) விஸ்வரூபம்: இந்த படத்தில் முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசன் தன் மனைவியை வெளி நாட்டினருக்கு கூட்டி கொடுப்பார். அல்குரானை தீவிரவாதத்தை போதிக்கும் நுலாகவும், தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும், கோவை, மதுரை போன்ற நகரங்கள் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடம் போல சித்தரித்துள்ளார்.

    இதுவரை முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்தவர் இப்பொழுது அவர்கள் பொண்டாட்டியை கூட்டி கொடுக்கும் அளவுக்கு ஒழுக்கம் கெட்டவர்கள் ஆகவும், அவர்கள் புனிதமாக மதிக்கும் வேத நூல் குரானை அசிங்கப்படுத்தியும், இனி முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்வதை மாற்று மதத்தினர் தவறாக பார்க்கும் அளவுக்கு படத்தை எடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார். அர்ஜூன், விஜயகாந்த் படங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு உண்டாக்கியிருக்கிறார். இப்படி படம் எடுத்தது மட்டும் இல்லாமல் இதற்க்கெல்லாம் தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று வேறு கூறியிருக்கிறார்.

    இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கு 2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னணியில் இருந்த ஹிந்துத்துவாவினர் கைது செய்யப்பட்டதும், ஹிந்துத்துவாவினர் காடுகளில் பயிற்சி எடுத்த தீவிரவாத முகாம்களை தேசிய புலனாய்வு துறையினர் தேடிவருவதும் கமலுக்கு தெரியாதா? இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் ,பாரதிய ஜனதா கட்சி என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டி உள்ள இந்நிலையில் கமலஹாசனின் இந்த முஸ்லிம் விரோத திரைப்படம் அவற்றை மறைக்க அல்லது நியாப்படுத்த உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.
    thanks sinthikkavum.net

    பதிலளிநீக்கு