சனி, ஜனவரி 26, 2013

அணு ஆயுத சோதனைகளில் அமெரிக்காவை குறிவைக்கும் வடகொரியா !!

அணு ஆயுத சோதனையை மீண்டும் நடத்தப் போவதாக வட கொரியா அறிவித்திருப்பதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த அறிவிப்பு தேவையற்ற பதற்றத்தை உருவாக்குமென வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை மீறுவதாகவும் அணு ஆயுதச் சோதனைகள் வட கொரியாவை மேலும் தனிப்படுத்தி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே இரு முறை அணு ஆயுதச் சோதனை நடத்தியுள்ள வட கொரியா, அமெரிக்காவைக் குறிவைத்து மீண்டும் அணு ஆயுதச் சோதனைகளையும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.
அமெரிக்காவுடனான கணக்கை தங்களது படை வலிமை மூலமாகவே தீர்க்கப் போவதாகவும் அந்த நாடு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.              1.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக