செவ்வாய், ஜனவரி 22, 2013

மது, லஞ்ச ஊழலுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்திய மாபெரும் மாநாடு!

நெல்லை:மது, லஞ்ச ஊழலுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தக்கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நெல்லையில் மாபெரும் மாநாடு நேற்று (ஜன-20) நடைபெற்றது. முன்னதாக இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மது மற்றும் உலக மயமாக்கலால் ஏற்படும் அவலங்கள் குறித்த மாதிரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. பாளை
சித்தா மருத்துவ கல்லூரியிலிருந்து துவங்கிய பேரணி இறுதியாக பாளை ஜவஹர்  திடலில் முடிவடைந்தது.
பின்னர் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி காயிதே மில்லத் திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில்  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி, மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக், ரஃபீக் அஹமது, மாநில செயலாளர் நாஞ்சில் செய்யது அலி ஆகியோர் உரையாற்றினர்.
மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர்களான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கேரள மாநில பொது செயலாளர் மனோக் குமார், செயற்குழு உறுப்பினர் பாத்திமா ஆலிமா, ஃபாதர் ஜோசப் கென்னடி, மனித உரிமை அமைப்பின் வழக்கறிஞர் பிரிட்டோ மற்றும் ஜமாத்துல் உலாமாவின் ஜமால் முஹம்மது உசேன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இம்மாநாட்டில் அக்கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக