புதன், ஜனவரி 16, 2013

பிப்ரவரி 17ம் தேதி "பாப்புலர் ஃப்ரண்ட் தினம்" !!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி 10ம் தேதி மதுரையில் நடைபெற்றது. புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் இதுவேயாகும். இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாஹில் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஏ. காலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர். பிப்ரவரி 17ம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்க்கப்பட்ட தினம் என்ற அடிபப்டையில் ஒவ்வொரு வருடமும் அத்தேதியை "பாப்புலர் ஃப்ரண்ட் தினம்" என்று கொண்டாட
வேண்டும் என்ற தேசிய செயற்குழுவின் தீர்மானத்தின்படி அகில இந்திய அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 17ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது எனவும், காஞ்சிபுரம், திருச்சி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மண்டல அளவில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் (யூனிட்டி மார்ச்) என்ற அடிப்படையில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக