அமெரிக்கா- ரஷ்யாவுக்குமிடையே இருக்கும் பனிப்போரைப் போல தற்போது அமெரிக்கா- சீனாவிற்குமிடையே பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. தொழில் நுட்பமாக இருந்தாலும் ஆயுத தயாரிப்பாக இருந்தாலும் இரண்டு நாடுகளும் போட்டி முனையில் இருக்கின்றன. சமீபகாலமாக அமெரிக்க பத்திரிகைகள் சீனாவையும், அதன் தலைவர்களையும் இகழ்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
சீனாவில் ஊழல் மலிந்து விட்டது, அந்த நாட்டின் பிரதமர் வென்ஜியாபாவோ உள்ளிட்ட தலைவர்கள் ஊழல் மூலம் சொத்துக்களை குவித்துள்ளதாக தெரிவித்தது. இது சீன நடிகர் ஜாக்கிசானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சீனாவின் போனிஸ் டி.வி.க்கு அளித்த பேட்டியில் உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான், சீனா அல்ல. இங்கும் ஊழல் பிரச்சினை உள்ளது, அதை ஏற்று கொள்கிறேன். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவில் குறைவுதான் என்றார்.மேலும் அவர் கூறும்போது, சீனர்கள் தங்களை மட்டுமே விமர்சனம் செய்வார்களே தவிர வெளிநாட்டினரை அல்ல. அந்த வகையில் எங்கள் நாடு மிக சிறந்தது என்றும் ஜாக்கி குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக