திங்கள், ஜனவரி 14, 2013

சிரியாவில் விமான தாக்குதல்: பொதுமக்கள் 22 பேர் பலி !!

சிரியாவில் அதிபர் படைக்கும் போராளிகள் படைக்கும் இடையே கடும் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரியா தலைநகர் டமாஸ்கசின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள போராளிகளின் நிலைகள் மீது இன்று அதிபர் படையின் போர் விமானங்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தராயா என்னுமிடத்தை அதிபர் படையினர் மீட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றனர். இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் நாடு முழுவதும் போராளிகளுடன் நடக்கும் சண்டையில் இன்று மட்டும் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக