மேற்கு வங்காள மாநிலம் பாகல்பூர் மாவட்டம் புது ஜல்பைகுரி கிராமத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர், தனது மகனுடன் புதுடெல்லி செல்லும் ரெயிலில் பயணம் செய்தார். சாகிப்கஞ்ச் ரெயில் நிலையத்தில் இறங்க முயன்ற அவரால், கூட்டம் முந்தி அடித்துக்கொண்டு ரெயிலில் ஏற முற்பட்டதால் இறங்க முடியவில்லை. அவர் இறங்குவதற்குள் ரெயில் புறப்பட்டுவிட்டது. விக்ரம்ஷிலா-கல்கான் ரெயில் நிலையங்களுக்கு இடையே, மிக குறைந்த வேகத்தில் ரெயில் சென்றபோது, ரெயிலில் இருந்து அவர் கீழே குதித்தார். அப்போது தண்டவாளத்தின் ஓரமாக குடிபோதையில் இருந்த சிலர், அவரை அருகில் உள்ள மாந்தோப்புக்கு தூக்கிச்சென்று மாறி, மாறி கற்பழித்தனர். பின்னர், கத்தியால் அவரது கழுத்தை அறுத்து, மாமரத்தில் தூக்குமாட்டிய குற்றவாளிகள் அனைவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி தலைமறைவாகிவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து பாகல்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக