செவ்வாய், மே 29, 2012

மியான்மர் நாட்டின் வளர்ச்சிக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் இந்தியா !

India gives $500 to Myanmar for the country's development.
 மியான்மர் நாட்டுக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக 500 மில்லியன் டாலர்(ரூ.2,800 கோடி) கடன் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று கையெழுத்தானது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் பயணமாக நேற்று முன் தினம் மியான்மருக்கு வந்தார். நேய்பிடாவில் அவர் மியாமன் அதிபர் தேயின் சேன்னை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 

மியான்மருக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக இந்தியா 500 மில்லியன் டாலர் கடன் வழங்குவதும் அதில் ஒன்று. இந்தியாவின் ஏற்றுமதி&இறக்குமதி வங்கியும், மியாமன்மரின் வெளிநாட்டு வர்த்தக வங்கியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இன்னொரு முக்கிய ஒப்பந்தம், இருநாட்டு எல்லைப்பகுதி வளர்ச்சிக்கான ஒப்பந்தம். இதன்படி, அந்த பகுதிகளில் பள்ளிகள், சுகாதார மையங்கள் போன்றவை அமைக்க இந்தியா உதவும். இந்தியாவின் நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், அருணாசலபிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் மியாமன்மரின் எல்லையை ஒட்டியுள்ளன. இந்த எல்லைகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டால், ஊடுருவல் பிரச்னை குறையும் என இந்தியா எதிர்பார்க்கிறது. 

ஒப்பந்தங்கள் கையெழுத்தான பின்பு மன்மோகன் சிங் கூறுகையில், ‘இருநாடுகளும் பொருளாதார மேம்பாட்டுக்கு ஒருங்கிணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளோம். இருநாட்டு உறவில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.  ஆங்சான் சூகி: மியான்மரின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், ஜனநாயகத்துக்காக போராடி வருபவருமான ஆங்சான் சூகியை இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இன்று சந்தித்து பேசவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக