ஈரோடு சுதா டெஸ்ட் டியூப் பேபி மருத்துவமனையில் குழந்தை பேறு இல்லாத தம்பதிகளுக்கு சோதனை குழாய் மூலம் குழந்தைகளை உருவாக்கி பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. நீண்டகாலமாக குழந்தை பேறு இன்றி தவிக்கும் தம்பதியினரை பரிசோதனை செய்து மாதம் ஒருமுறை சோ தனை குழாயை பயன்படுத்தி மும்பை மருத்துவக்குழுவினரின் ஆலோசனையுடன் கருவுறுதல் நடத்து கின்றனர். அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் இம்மருத்துவமனையில் சோதனை குழாய் மூலம் குழந்தைகளை உருவாக்கும் வகையில் கருவுறுதல் நிகழ்வை ஏற்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக கருவுற்ற 19 தாய்மார்களுக்கு ஒரேநாளில் சிசேரியன்அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு இரட்டை குழந்தைகளும், 12 கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு குழந்தை வீதம் மொத்தம் 26 குழந்தைகள் ஒரேநாளில் பிரசவிக்கப்பட்டது. சுதா மருத்துவமனை யின் நிர்வாக இயக்குநர் டாக்டர் தனபாக்கியம் தலைமையில் டாக்டர்கள் பிரதீபா, சுமதி, மயக்க மருந்து மருத்துவர்கள் பத்மநாபன், சுகுமார், சரவணக்குமார், குழந்தை மருத்துவ நிபுணர்கள் சண்முகம், பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சுதா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் தனபாக்கியம் கூறியதாவது: எங்களது மருத்துவமனையில் 20 ஆண்டுக்கும் மேலாக டெஸ்ட் டியூப் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்.
கடந்த 2008ம் ஆண்டில் முதன்முறையாக சோதனை குழாய் மூலம் ஒரே நாளில் எங்களது மருத்துவமனையில் 20 குழந்தைகளை பிரசவித்து சாதித்துள்ளோம். இச்சாதனையை நாங்களே முறியடிக்கும் வகையில் கடந்த 23ம் தேதியன்று ஒரேநாளில் 26 குழந்தைகளை பிரசவித்து சாதனை புரிந்துள்ளோம். காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இடைவிடாது அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிரசவிக்கப்ப்டடது. இது அகில இந்திய அளவில் முதன்முறையாக இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு டாக்டர் தனபாக்கியம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக