புதன், மே 23, 2012

முஷாரப் கைதாகும் வரை வாரன்ட் அமலில் இருக்கும். இண்டர்போலிடம் பாகிஸ்தான் உறுதி !


இந்நிலையில், இந்த வாரன்ட் உத்தரவு எவ்வளவு காலம் அமலில் இருக்கும் என்று எப்.ஐ.ஏயிடம் விளக்கம் கேட்டு இன்டர்போல் கடிதம் அனுப்பியது. இது பற்றி, எப்.ஐ.ஏ பப்ளிக் பிராசிகியூட்டர் சவுத்ரி ஜுபிகர் அலி நேற்று கூறியதாவது: பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணைக்கு இது வரை முஷாரப் ஆஜராகவில்லை. இதனால், பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு வாரன்ட் பிறப்பித்தது.

இந்த வாரன்ட் எவ்வளவு நாள் அமலில் இருக்கும் என்று கேட்டு இன்டர்போல் கடிதம் அனுப்பியது.  முஷாரப் கைதாகும் வரை வாரன்ட் உத்தரவு அமலில் இருக்கும் என நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே, இதை இன்டர்போலுக்கு தெரிவித்துள்ளோம். முஷாரப் எப்போது பாகிஸ்தானுக்கு வந்தாலும் அவர் கைது செய்யப்படுவார். இவ்வாறு ஜுபிகர் அலி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக