சனி, மே 26, 2012

சூரிய சக்தி விமானம்: சோதனை ஓட்டம் துவங்கியது !

சூரிய சக்தி விமானம்: சோதனை ஓட்டம் துவங்கியது
 முழுக்க முழுக்க சூரிய சக்தியால் இயங்கும் விமானம், சுவிட்சர்லாந்து நாட்டின் பேயர்னி பகுதியிலிருந்து பரிசோதனை ரீதியாக நேற்று பயணத்தை துவக்கியது. ஆன்ரி போர்ஷ்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகிய 2 விமானிகள் இந்த விமானத்தை ஸ்பெயின், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஓட்டிச் செல்கின்றனர்.  ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் இன்று தரையிறங்கும் இந்த விமானம், 70 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டைப் பிரிக்கும் பைரனீஸ் மலைகளைக் கடந்து செல்லும் இந்த விமானத்தின் இறக்கை 63 மீட்டர் நீளமுடையது. இறக்கை முழுவதும் சூரிய ஒளியை கிரகிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. 

மொராக்கோ மன்னர் முகமதுவின் அழைப்பின் பேரில் இந்த விமானம் மொராக்கோ நாட்டின் ரபாத் நகருக்கும் செல்ல உள்ளது. உலகில் அதிக அளவில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் நாடாக மொராக்கோ விளங்கி வருகிறது. சூரிய மின் உற்பத்தி மையங்கள் அங்கு அதிக அளவில் செயல்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக