சனி, மே 19, 2012

தாலிபான் தாக்குதல்:ஆப்கானில் 2 நேட்டோ வீரர்கள் பலி!

காபூல்:தாலிபான் போராளிகளின் ராக்கெட் தாக்குதலில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் இரண்டு நேட்டோ ராணுவத்தினர் பலியாகினர். ஆறுபேருக்கு காயம் ஏற்பட்டது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் குனார் மாகாணத்தில் நேட்டோ ராணுவ தளத்தின் மீது தாலிபான் ராக்கெட் தாக்குதலை நடத்தியது.
இதனை நேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பலியான ராணுவ வீரர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள்? என்பது குறித்த தகவல்களை நேட்டோ வெளியிடவில்லை.
இத்துடன் இவ்வாண்டு ஆப்கானிஸ்தானில் பலியாகும் ஆக்கிரமிப்பு அந்நிய நாட்டுப்படையினரின் எண்ணிக்கை 158-ஆக உயர்ந்துள்ளது.
ஆப்கானின் எதிர்காலம் குறித்து சிக்காகோவில் நேட்டோ மாநாடு நடைபெற இருக்கும் வேளையில் தாலிபானின் தாக்குதல் நடைபெற்றுள்ளது. 2014-ஆம் ஆண்டு நேட்டோ ராணுவத்தை வாபஸ் பெறப்படும் வேளையில் ஆப்கானின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து சிக்காகோவில் நடைபெறும் 2 நாட்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக