புதுடெல்லி:பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பாலியல் தொல்லைகள் உள்பட பல்வேறு தொல்லைகள் தரப்படுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
மாநிலங்களவையில் நேற்று(வெள்ளிக்கிழமை) கேள்வி நேரத்தில் பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் இதுத்தொடர்பான விபரங்களை வெளியிட்டார்.
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்குப் பாலியல் தொல்லைகள் உள்பட பல்வேறு தொல்லைகள் தரப்படுவதாக தமிழ்நாட்டிலிருந்துதான் 115 புகார்கள் ‘தேசிய குழந்தை நல உரிமைகள் பாதுகாப்பு கமிஷன்’ (என்.சி.பி.சி.ஆர்.) என்ற அமைப்புக்கு வந்துள்ளது.
மாணவ மாணவிகளை அடிப்பது, அலைக்கழிப்பது, அவமானப்படுத்துவது, பாலியல் ரீதியாகத் தொல்லை தருவது ஆகியவை தொடர்பானவை இந்தப் புகார்கள். மொத்தம் 570 புகார்கள் வந்தன. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக தில்லியிலிருந்து 105 புகார்கள் வந்துள்ளன. ஆந்திரத்திலிருந்து 43 புகார்கள் வந்துள்ளன என்று இ.அஹ்மத் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக