செவ்வாய், மே 29, 2012

பா.ஜ.கவின் என்.டி.ஏ கூட்டணி விரைவில் உடைந்து சிதறும் – லாலு பிரசாத் யாதவ்!

புதுடெல்லி:பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி(என்.டி.ஏ) விரைவில் உடைந்து சிதறும் என ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த லாலு கூறியது: ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாரதிய ஜனதா அறிவித்தவுடன் அந்தக் கூட்டணியிலிருந்து பல தோழமைக் கட்சிகள் வெளியேறும்; அந்தக் கட்சியிலேயே மோடியின் தலைமையை விரும்பாதவர்கள் இருப்பதால் அந்தக் கட்சியே பிளவுபடும்.

பீகாரிலும் நிதீஷ் குமார், சுசீல் குமார் மோடி கூட்டணியில் பிளவு உண்டாகும். பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகளுக்கிடையே புதிய கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது.
சுசீல்குமார் மோடி அழைத்தார் என்பதற்காக மம்தா பானர்ஜி மீண்டும் பாஜக கூட்டணிக்குச் செல்ல மாட்டார்; அவர் மிகுந்த பக்குவம் உள்ள அரசியல் தலைவர். தன்னுடைய செல்வாக்கை வீணாக இழக்க மாட்டார்.’ என்று லாலு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக