வியாழன், மே 24, 2012

பெட்ரோல் விலை உயர்வில் மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை:காங்கிரஸ்

 புதுடெல்லி:பெட்ரோல் விலை உயர்வில் மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தப்பட்டது நாடு முழுவதும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்,இந்த விலை உயர்வு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி,"பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டதால்,பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்து வருகின்றன.இது எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவு.

இதில் மத்திய அரசுக்கு எவ்வித தொடர்பும் இல்லை.இருப்பினும், இது கடினமான முடிவுதான்.சர்வதேச பொருளாதார சூழ்நிலையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது"என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக