புதுடெல்லி:மிகச்சிறந்த ரீதியில் சேவையாற்றி வரும் அரசு, தனியார் இணையதளங்களுக்கு ஹாக்கிங் அச்சுறுத்தல் நிலவுவதாக இந்தியாவின் சைபர் ஏஜன்சியான இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்(CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. டிஸ்ட்ரிப்யூட்டட் டினைல் ஆஃப் சர்வீஸ்(Distributed Denial of Service (DDoS)) மூலமாக ஹாக்கர்கள் பிறருடைய கம்ப்யூட்டர்களில் நுழைந்து ஹாக்கிங்
ஹாக்கிங் செய்ய விரும்பும் நபரின் சிஸ்டத்திற்கு தொடர்ந்து மெஸேஜ்களை அனுப்புவதும், கம்ப்யூட்டர் ஷட்டவுன் செய்வதற்கு அவரை நிர்பந்திப்பதும் வழக்கமாகும்.
டி.டி.ஒ.எஸ்ஸை தடுக்க ஃபயர்வால்ஸும், பாதுகாப்பு டூல்ஸையும் அப்டேட் செய்வதன் மூலமே ஹாக்கிங்கை தடுப்பதற்கான ஒரே வழி என சைபர் ஏஜன்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் சைபர் பாதுகாப்பு பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக நேற்று முன்தினம் முடிவடைந்த பாராளுமன்ற கூட்ட அமர்வில் அமைச்சர் சச்சின் பைலட் சி.இ.ஆர்.டி-இன்னை மேற்கோள்காட்டி தெரிவித்தார்.
2009-ஆம் ஆண்டு 8266 வழக்குகள் சைபர் பாதுகாப்பு தொடர்பாக பதிவுச் செய்யப்பட்டுள்ளன. 2010-ஆம் ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை 10315 வழக்குகளும், 2011-ஆம் ஆண்டு 13301 வழக்குகளும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இணையதளத்தில் ஊடுருவல், வைரஸ்களை அனுப்புவது ஆகியன தொடர்பான வழக்குகள் தாம் மேற்கண்டவற்றில் பெரும்பாலானவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக