செவ்வாய், மே 22, 2012

சிரியா மோதல் லெபனானுக்கு பரவுகிறது!

பெய்ரூத்:லெபனானில் எதிர்கட்சியான மார்ச் 14-ஐ சார்ந்த 2 உறுப்பினர்கள் கொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடந்த மோதலில் குறைந்தது 2 பேர் பலியானார்கள். 18 பேருக்கு காயம் ஏற்பட்டது. சிரியாவில் பஸ்ஸார் ஆஸாதின் சர்வாதிகார அரசை ஆதரிக்கும் அலவிகளும், சிரியா எதிர்கட்சியை ஆதரிக்கும் சன்னிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றுள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் மோதல் எல்லையை கடந்து லெபனானுக்கும் பரவுமா என்ற பீதி ஏற்பட்டுள்ளது. எல்லை பகுதியான திரிபோலியில் கடந்த சில தினங்களாக இரு பிரிவினர் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
சன்னி மார்க்க அறிஞரான ஷேக் அஹ்மத் அப்துல் வாஹிதும் அவரது மெய்க்காப்பாளர் முஹம்மது ஹுஸைன் மிரைபியும் நேற்று முன்தினம் கொலைச் செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக