இஸ்லாமாபாத்:வடக்கு வஸீரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம்(ட்ரோன்) நடத்திய தாக்குதலில் 4 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மீரான்ஷாவில் வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு அருகே போராளிகள் தங்கியிருப்பதாக கூறப்பட்ட வீட்டின் மீது இத்தாக்குதல் நடந்தது. பலியானவர்கள் எந்த போராளிக் குழுவைச் சார்ந்தவர் என்பது உறுதிச்
செய்யப்படவில்லை.
ஆப்கானிஸ்தானிற்கு அருகேயுள்ள வஸீரிஸ்தான், தெஹ்ரீக்-இ-தாலிபான் மற்றும் ஹக்கானி தலைமையிலான போராளிக் குழுவுக்கும் செல்வாக்கு மிகுந்த பகுதியாகும்.
சிக்காகோவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் முதல் ஆளில்லா விமானத்தாக்குதல் ஆகும். சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என கடந்த மாதம் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இதனை நிராகரித்த அமெரிக்கா, தனது அடாவடி ஆளில்லா விமானத் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக