வெள்ளி, மே 25, 2012

ஜெர்மனியில் சமூக மாற்றத்தை நோக்கி இஸ்லாம் !

Weaving Islam into Germany’s social fabricபெர்லின்:தனது நாட்டு மக்களிடம் தனது செல்வாக்கை அதிகரிக்க மத ரீதியிலான பாகுபாடு காட்டும் மனப்பான்மையை கொண்ட பிரான்ஸைப் போல் அல்லாமல் ஜெர்மன் அரசு மதம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் பொதுமக்களின் நலனுக்கு பயன்படுத்தி வருகிறது. மேலும் அங்கீகாரம் அளிக்கப்பட்ட மதங்களான
கிறிஸ்துவம் மற்றும் யூத மதத்தை ஜெர்மன் அரசு பொது நிறுவனமாக கருதி அதற்கு பல சலுகைகளையும், உதவிகளையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மன் அரசு ஒருவர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது அதில் தான் ஒரு கிறிஸ்துவர் எனக் குறிப்பிட்டால் அவர்களிடமிருந்து சர்ச் வரி என்றொரு வரியை வசூலித்து அதனை பல்வேறு சர்சுகளுக்கு நிதியுதவியாக அளித்து வருகிறது. மேலும் இந்த வரியின் மூலம் அந்த மதத்தை அரசு பள்ளிகளில் பயிற்றுவிக்கவும் நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனியில் இஸ்லாம் இதுவரை அந்த அந்தஸ்தை அடையவில்லை என்றாலும் சில பள்ளிகள் இஸ்லாத்தை போதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெர்மன் முழுவதும் 700,000 முஸ்லிம் குழந்தைகள் இருப்பதால் அவர்களுக்கு இஸ்லாத்தை போதிக்க குறைந்தது 2,000  ஆசிரியர்களாவது தேவைப்படுவர் என்று ஜெர்மனின் அரசு புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் 2  வருடத்திற்கு முன் ஜெர்மன் கவுன்சில் பார் சயின்ஸ் அண்ட் ஹுமானிடீஸ் எனும் தனியார் அமைப்பு கிறிஸ்துவத்திற்கு இருப்பது போன்று அரசு பல்கலைக் கழகங்களில் இஸ்லாமும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்து இருந்தது. மேலும் மதங்களை அரசின் அங்கமாகப் பார்க்கும் ஜெர்மனியில் இஸ்லாமிய மையங்கள் அதிகரித்து வருவது ஜெர்மனியில் இஸ்லாம் சமூக அந்தஸ்த்தை அடைந்து வருவதைக் காட்டுகிறது.
இது பற்றி ஜெர்மன்வாசியான ஹம்தான் தெரிவித்தாதவது; “தற்போது நாங்கள் உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டோம் இனி இஸ்லாத்தை பல்கலைக் கழகத்தின் வெளியில் கற்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.
இரண்டு வருடத்திற்கு முன் ஒருங்கிணைந்த ஜெர்மனி உருவாகி 20  ஆம் நினைவு ஆண்டு கொண்டாட்டத்தின் போது முன்னால் அதிபர் கிறிஸ்டியன் வுல்ப் இனி இஸ்லாமும் ஜெர்மனின் ஒரு அங்கம் என்று கூறினார். அதற்கு அப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியது நினைவுக் கூறத்தக்கது.
மேலும் ஒரு காலம் வரும் அப்போது வெளியிலிருந்து இமாம்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்றும் இஸ்லாத்தை மேற்குலகம் புரிந்துகொள்ள ஐரோப்பாவில் உள்ள மையங்களே வழிவகைகளைக் காணும் என்றும் இதனால் ஐரோப்பாவில் மற்ற சமூக மக்களுடன் முஸ்லிம்கள் இணைந்து வாழமுடியும் என்று ஜெர்மனின் தனியார் அமைப்பின் உறுப்பினரான லாங்கேன் பில்த் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக