வியாழன், மே 31, 2012

ஊழல் குற்றச்சாட்டால் பிலிப்பைன்ஸ் தலைமை நீதிபதி பதவி நீக்கம் !

பிலிப்பைன்ஸ் நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஊழல் புரிந்துள்ளார் என அந்நாட்டின் நாடாளுமன்றம் கண்டறிந்துள்ளது.
இதையடுத்து அவர் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து நீக்கப்பட வழி ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ரெனாட்டோ கொரோனா, தனக்கு பல
மில்லியன் டாலர்கள் அளவுக்கு சொத்துக்கள் உள்ளன என்பதை வெளியிடாமல் இருந்ததன் மூலம் அரசியல் சாசனத்தை மீறியுள்ளார் என்று செனட் சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் கண்டறிந்தனர்.
நாட்டில் ஊழலை ஒழிப்பது தொடர்பில் அதிபர் பெனிக்னோ அக்கினோ எடுத்து வரும் நடவடிக்கையின் மிக முக்கிய செயல்பாடாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை பதவிநீக்கும் வழிமுறைகள் பார்க்கப்படுகின்றன.
தனக்கு முன்னர் அதிபராக இருந்த குளோரியா அரோயோ, கொரோனா அவர்களை சட்டவிரோதமாக பதவியில் அமர்த்தினார் என்றும், அதிபர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை காப்பாற்ற அரோயோ முயற்சித்தார் என்றும் தற்போதைய அதிபர் அக்கினோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னாள் அதிபர் குளோரியா அரோயோ வாக்குப்பதிவில் மோசடி செய்தார் என்கிற குற்றச்சாட்டில் தற்போது தடுப்புக் காவலில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக