நாட்டின் குடிமக்களை தாக்கும் ராணுவத்தினரை குற்றவியல் நீதிமன்றங்களிலும் விசாரணை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு கஷ்மீர் மாநில இளைஞர் ஒருவரை சுட்டுக் கொலைச் செய்த இரண்டு பி.எஸ்.எஃப் படை வீரர்கள் மீதான விசாரணையின் போது உச்சநீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை ராணுவ நீதிமன்றத்தில் தான் விசாரணைச் செய்யவேண்டும் என்ற ராணுவத்தின் கோரிக்கையை நீதிபதி சி.கே.பிரசாத்தை தலைவராக கொண்ட அமர்வு நிராகரித்தது.
ராணுவத்தினருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் ராணுவ நீதிமன்றம்தான் விசாரிக்கவேண்டும் என்பதல்ல என்று நீதிமன்றம் விளக்கம் அளித்தது. வழக்கை ராணுவ நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டுமெனில் காரணங்களை விசாரணை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு பி.எஸ்.எஃப் கமாண்டிங் அதிகாரிக்கு பொறுப்புண்டு என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், அது நடக்கவில்லை. மட்டுமல்லாமல், சிறப்பு ராணுவ அதிகாரச் சட்டத்தின் சில பிரிவுகள் பொதுச் சட்டத்தை முற்றிலும் தவிர்க்கவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக