சனி, ஏப்ரல் 20, 2013

வக்ஃப் சொத்துக்களை பாதுக்காக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அழைப்பு !

  • உலகின் பழம்பெரும் பாரம்பரியத்திற்கு சொந்தமான இந்திய தேசத்தில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரம.நீதி,பாதுகாப்பு, மற்றும் சமூக உரிமையும் தொடர்ந்து கேள்விக்குறியாக்கப் பட்டு வருவது நாம் அறிந்ததே. 
  •  
  • ஆனால் ஒருங்கினைந்த இந்தியாவை உருவாக்கிய குறிப்பாக பாபர். அவுரங்கசீப். அதனை தொடர்ந்து திப்பு சுல்தான் போன்றவர்கள் சாதி மததிற்கு அப்பாற்பட்டு இந்து. முஸ்லிம் சமூக மக்களுக்கும் அவர்களின் மத வழிபாட்டுஸ்தலங்களுக்கும் வாரி வழங்கிய மானியங்கள் என்னற்றவை! இந்தியாவில் அதிகமான சொத்துக்கள், இரயில்வேதுறையும, ரானூவ துறையும் கொன்டுள்ளது. 
  •  
  • அடுத்தபடியாக முஸ்லிம்களின் நலனுக்காக வஃக்ப் செய்யப் பட்ட 6 இலட்சம் ஏக்கர் சொத்துக்களூடன் வஃக்ப் நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது, ஆனால் இதில் அதிர்ச்சியானவிஷயம் என்னவெனில் மேற்கூறப்பட்ட சொத்துக்கள் 70 சதவிகிதம் ஆக்கிரமிப்புகளாக்கபட்டு, மிகக்குறைந்த தொகைக்கு வாடகைக்கு விடப்பட்டும் உள்ளது என்பதுதான். உதாரனமாக மும்பையில் மிகவும் விலை உயர்ந்த இடமான அல்டாமவுன்ட ரோட்டில் பிரபல கோடீஸ்வரர் அம்பானி வீடு600 கோடி ரூபாய் செலவில் கட்டபட்டுள்ளது.இப்படி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் உட்பட பல அரசு அலுவலகங்கள் வக்ஃப் சொத்தில் கட்டபட்டுள்ளது.
  •  
  •  வக்ஃப் சொத்துக்கள் பரமரிக்கபட்டு அதன் மூலம் கிடைக்க பெறும் வருமானம் முறையாக செலவிடபட்டால் இந்தியாவில் ஒரு முஸ்லிம்கூட ஏழையாக இருக்கமாட்டான், வக்ஃப் சட்டதிருத்த மசோதா ராஜ்ய சபாவில் இன்னும் சமர்பிக்க படவில்லை. எனவே அரசு முஸ்லிம்கள் ஆகிய நாம் இத்விஷயத்தில் உரிய தருணத்தில் எடுக்க வேண்டும். சமூக மேம்பாட்டு பணிகளுக்கு வக்ஃப் சொத்துக்கள் பயன்படுத்தபட்டால் சமூகம் முன்னேற்றம் அடையும். இது பற்றிய விழிப்புனர்வும் அக்கறையும் அனைவருக்கு இருக்கவேன்டும். 
  •  
  • ஏப்ரல் 26 அன்று தமிழகம் தழுவிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா"உரிமையை மீட்போம்! இருப்பதை பாதுகாப்போம். என்ற முழக்கதில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. இன்ஷா அல்லாஹ் ஆர்பாட்டத்தில் நியாயவான்கள் அனைவரும் அலைகடலென ஆர்பரித்துவாரிர்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக