வியாழன், ஏப்ரல் 25, 2013

பேஸ்புக்கில் விளம்பரம் செய்து பச்சிளம் குழந்தை ரூ.8 லட்சத்துக்கு விற்பனை அதிர்ச்சியில் மக்கள் !

  • பேஸ்புக் மூலம் பச்சிளம் குழந்தையை ரூ.8 லட்சத்துக்கு விற்ற தாத்தா உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் இளம்பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. உடனே, குழந்தையை விற்க அந்த பெண்ணின் தந்தை முடிவு செய்தார். அதே மருத்துவமனையில் நர்சாக பணியாற்றும் பெண்ணுக்கு குழந்தையை ஸி45 ஆயிரத்துக்கு விற்றார். 
  •  
  • அந்த நர்ஸ், அதே மருத்துவமனையின் பரிசோதனை கூடத்தில் உதவியாளராக பணியாற்றுபவருக்கு ஸி3 லட்சத்துக்கு விற்று பணத்தை எடுத்துச் சென்றார்.குழந்தையை வாங்கிய பரிசோதனை கூட உதவியாளர், அதை பல கோணங்களில் புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் விற்பனைக்காக விளம்பரம் செய்தார். டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அதை பார்த்து, அவரிடம் பேரம் பேசினார். 
  •  
  • இறுதியில், ஸி8 லட்சம் கொடுத்து குழந்தையை வாங்கிச் சென்றார்.பேஸ்புக் மூலம் குழந்தை விற்கப்பட்ட ரகசிய தகவல் டெல்லி போலீசாருக்கு கிடைத்தது. உடனே, தொழிலதிபரின் வீட்டில் சோதனை நடத்தி குழந்தையை மீட்டனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, குழந்தையை விற்ற பெண்ணின் தாத்தா, நர்ஸ், பரிசோதனை கூட உதவியாளர், தொழிலதிபர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இந்தியாவில் ஆண்டு தோறும் பல ஆயிரம் குழந்தைகள் விற்கப்படுகின்றனர். ஆனால், பேஸ்புக் மூலம் குழந்தை விற்கப்பட்ட சம்பவம் இப்போதுதான் முதல் முறையாக நடந்துள்ளது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக