வியாழன், ஏப்ரல் 25, 2013

ஹஜ் பயணம் - 2701 பேர் குலுக்கல் முறையில் தேர்வு!

சென்னை: தமிழ் நாட்டிலிருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள்  ஹஜ் கமிட்டி  மூலம்  2, 701 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மேலும் 936 பேர் சிறப்பு தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான குலுக்கல் 23.04.2013 செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆணைக்கார்அப்துல் சுக்கூர் கலையரங் கில் நடைபெற்றது.


இந்த ஆண்டு தமிழகத்திற்கு 3,637 இடங்கள் ஒதுக்கீடாக கிடைத்துள்ளன. இதில் இந்தியஹஜ் குழுவின் வழிகாட்டுதலின்படி 70 வயது மற்றும்அதற்கு மேற்பட்ட வயதுடையபயணியுடன் ஒரு துணை பயணிஎன்னும் வகையில் 380பயணிகள் மற்றும் 2010ம்ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரையில் மூன்று முறைதொடர்ச்சியாக விண்ணப்பித்துதேர்வு செய்யப்படாமல் இந்தஆண்டு விண்ணப்பித்த 556பயணிகள் ஆக மொத்தம் 936பயணிகள் சிறப்பு வகையின் கீழ்குலுக்கள் இன்றி நேரடியாகதேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் குலுக்கல் மூலம்2,701 புனித பயணிகள் மாவட்டம் வாரியாக தேர்வுசெய்யப்பட்டனர். இந்த பட்டியலும் காத்திருப்போர் பட்டிய லும் வெளியிடப்பட்டது.

தமிழக பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மை நலத்துறைஅமைச்சரும் தமிழக ஹஜ் கமிட்டிதலைவருமான ஆ. முஹம்மதுஜான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மை நலத்துறைமுதன்மை செயலாளர் முனைவர்க. அருள்மொழி, தமிழ்நாடு ஹஜ்கமிட்டி செயலாளர் முஹம்மது நஸீமுத்தீன், போதுதமிழ்நாடு வக்ஃபு வாரியதலைமை அலுவலர் முஹம்மதுராசிக், புதுக்கல்லூரி முதல்வர்முஹம்மது மாலிக், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டடனர் .

இவ்வருடம் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துமாவட்டங்களிலிருந்தும் ஹஜ்பயணத்திற்காக 7குழந்தைகள் உட்பட 11,411 பேர் விண்ணப்பம்செய்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக