- பாகிஸ்தானில் சிறையில் சரப்ஜித்சிங் தாக்கப்பட்டது
கண்டிக்கத்தக்கது.பாகிஸ்தான் அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இந்திய
அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவிநேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்..
1990 பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டு கோர்ட்லட்பட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்தியாவை சேர்ந்த சரப்ஜித்சிங்.
இவரது தூக்குதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பஞ்சாப் அரசும், மத்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.இந்நிலையில் மிகக்கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சரப்ஜித்சிங் தற்போது கோமா நிலையில் இருப்பதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரைப் பார்ப்பதற்கு இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சரப்ஜித்சிங் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அப்சர்குரு தூக்கிலிடப்பட்ட கோபத்தில் சக கைதிகளால் தாக்கப்பட்டார் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருந்தாலும் இந்திய கைதி சரப்ஜித்சிங்க்கு உரிய பாதுகாப்பு அளித்திருக்க வேண்டியது பாகிஸ்தான் அரசின் பொறுப்பாகும். சரப்ஜித்சிங் மீதான தாக்குதல் பாகிஸ்தான் பொறுபேற்க வேண்டும். இந்திய அரசு இதுகுறித்து உரிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.3
திங்கள், ஏப்ரல் 29, 2013
பாகிஸ்தானில் சிறையில் சரப்ஜித்சிங் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது எஸ்டிபிஜ கட்சி கண்டனம் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக