ஞாயிறு, ஏப்ரல் 21, 2013

மலேசிய பொதுத் தேர்தல் 2013: ஆளும் தேசிய முன்னணிக்குக் கடும் சவால் !

மலேசியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறவுள்ள 13வது பொதுத் தேர்தலில் பல இடங்களில் பன்முனைப் போட்டி நிலவுகிறது. பல இடங்களில் நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் போட்டியிடப் பல வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். 
 
வேட்பு மனு தாக்கல் நாளான நேற்றுப் பிரதமர் நஜிப் துன் ரசாக் முதல் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வரை 1,500க்கும் அதிகமான வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். திரு நஜிப் வழக்கம் போல பாஹாங்கில் உள்ள பெக்கான் தொகுதியில் போட்டி யிடுகிறார். அவரை எதிர்த்துக் கெஅடிலான் கட்சி வேட்பாளர் ஃபாரிஸ் மூசா போட்டியிடுகிறார்.
 
அன்வார் இப்ராகிம் பினாங்கில் உள்ள அவரது பெர்மத்தாங் பாவ் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அம்னோ வேட்பாளர் மஸ்லான் இஸ்மாயில், சுயேச்சை வேட்பாளர் அப்துல்லா சவாவி ஷமுதீன் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். ஜோகூர், சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா, பாஹாங் ஆகிய மாநிலங்களிலும் கோலாலம்பூரிலும் பலமுனைப் போட்டி நிலவுகிறது. 3
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக