செவ்வாய், ஏப்ரல் 16, 2013

அமெரிக்காவில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்பு !

  • அமெரிக்காவில் அடுத்தடுத்து தொடர் குண்டுவெடிப்பு, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1ஊ க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
  •  
  • அமெரிக்காவின் பாஸ்டர்ன் நகரில் மடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 140 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சுமார் 27 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் யொருத்தி நேரத்தில் தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. போட்டியாகளர்கள் பந்தயத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஓடுதளத்தின் அருகிலேயே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    முதல் குண்டு வெடித்த சிறிது நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது. அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 140 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 
  •  
  • சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சி பெறுபவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. சம்பவ இடத்திலிருந்து வெடிக்காத குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதால் பதற்றம்  தொடருகிறது. அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் நாசவேலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா. குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக