செவ்வாய், ஏப்ரல் 16, 2013

லஞ்சம் தர பணமில்லாததால் பேருந்து நிலையத்தில் பிரசவித்த ஏழைப் பெண் !

  • சேலம் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் தாதியர்க்கு லஞ்சமாகத் தர ஆயிரம் ரூபாய் பணமில்லாததால் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண், 
  •  
  • சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பேருந்து நிலை யத்திற்கு வலியுடன் நடந்து சென்றார். பின் அவ்வழியாக வந்த ஒரு பாட்டியின் துணையுடன், பேருந்து நிலைய கழிப்பறை அருகே பிரசவம் பார்க்கப்பட்டு, ஆரோக்கியமான ஆண் குழந்தையை ஈன்றார் அந்தப் பெண். கடந்த ஞாயிறு அன்று லட்சுமிக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. 

  •  
  • உடனே அவரை அழைத்துக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்றார் சேமுவல். அரசு மருத்துவமனை களில் இலவச சிகிச்சைதான் என்றபோதிலும், 1,000 ரூபாய் கொடுத்தால்தான் அவரை மருத் துவமனையில் அனுமதிப்போம் என்று சேமுவலிடம் அங்குப் பணி ஆற்றிய தாதியர்கள் கூறினர். வீடில்லாமல் நடைபாதையில் வசித்துவரும் தம்மிடம் அவ்வளவு பணமில்லை என்று அவர் கெஞ்சிப் பார்த்தும், பணம் கொடுத்தால்தான் இடம் எனக் கண்டிப்பாகக் கூறி விட்டனர் அந்தத் தாதியர்கள். இதனால், வலியுடன் தமது கூடாரத்திற்கே திரும்பி குழந் தையைப் பெற்றெடுத்தார் லட்சுமி. அவரது ஓலத்தைக் கேட்ட அவ் வழியாக வந்தோர், மருத்துவ வண்டியை வரவழைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் உறுதியளித்தார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக