புதன், ஏப்ரல் 17, 2013

பயங்கர நிலநடுக்கம் ஈரான், பாகிஸ்தானில் 73 தாண்டியது !

  • ஈரான், பாகிஸ்தான் எல்லையில் நேற்று ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் இரு நாடுகளிலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. இதில், 73 மேற்பட்டோர்கள்  பலியானார்கள். 
  •  
  • வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஈரான், பாகிஸ்தானில் நேற்று மாலை இந்திய நேரப்படி மாலை 4.14 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. 15 விநாடிகள் பூமி குலுங்கியதில், அந்த பகுதியில் இருந்த பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.

    வட மேற்கு ஈரானில், பாகிஸ்தான் எல்லையில் இருந்து 48 கி.மீ தூரத்தில் உள்ள ஷரவான் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவானது. நில நடுக்க மையத்தில் இருந்த ஷரவான் பகுதியில் மக்கள் தொகை மிகவும் குறைவு. அங்கு சிறிய கிராமங்கள் மட்டுமே இருந்தது. இதனால் ஈரானில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்றாலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 52 பேர் பலியானதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாகிஸ்தானில் நில நடுக்கத்துக்கு 21 பேர் பலியானார்கள். பலுசிஸ்தான் மாகாணத்தில் 1,000 வீடுகள் சேதம் அடைந்தது. அங்குள்ள கரண் மாவட்டத்தில் வீடுகள் தரைமட்டமானதில் 2 பெண்கள், 3 குழந்தைகள் பலியானார்கள். பஞ்குர் மாவட்டத்தில் வீடுகள் இடிந்ததில் 7 பேர் பலியாகியுள்ளனர் . பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் இந்த நில நடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக