புதன், ஏப்ரல் 24, 2013

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது கண்டிக்கத்தக்கது எஸ்டிபிஜ கண்டனம் !

பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது கண்டிக்கத்தக்கது வழக்கை சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும்.
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் நகரில் பா.ஜ.க அலுவலகம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் யாருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

இது போன்ற சம்பவங்கள் எங்கு நடைபெற்றாலும் காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரிப்பதில்லை. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் முக்கிய நகரங்களை குறி வைத்தும், அங்கு வாழும் முஸ்லிம்களை குறி வைத்துமே விசாரணை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

நடைபெற்ற சம்பவத்தால் யாருக்கு ஆதாயம் என்பதை காவல் துறையினர் ஆய்வு செய்வதில்லை. யாரையாவது கைது செய்து வழக்கை முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக செயல்படுகின்றனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல நடைபெற போகும் இத்தருணத்தில் பா.ஜ.க அலுவலகத்தில் குண்டு வெடித்தால் இது பா.ஜ.க விற்கே அனுதாபத்தையும், ஆதாயத்தையும் பெற்று தரும். எனவே இச்செயலை பா.ஜ.க வை எதிர்ப்பவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால் இது போன்ற எந்த கோணத்திலும் விசாரிக்காமல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை இந்த வழக்கில் கைது செய்வதில் முனைப்பு காட்டி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. உள்நோக்கம் கொண்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேலப்பாளையத்தை சேர்ந்த புகாரி என்ற இளைஞர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு விடுதலை பெற்று, தான் திருந்தி வாழ்வதோடு பல்வேறு விடுதலை பெற்ற கைதிகளின் மறுவாழ்வுக்காகவும், அவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை எடுத்து சென்று நடத்துவதிலும் முன்நின்று செயலாற்றி வருபவர். இதை தடுக்கும் நோக்கத்திலேயே அவரை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள புகாரி உட்பட அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்வதோடு வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக