செவ்வாய், ஏப்ரல் 23, 2013

முஸ்லிம்களும் ஆயுதம் எடுப்பார்கள்: ஆசாத் சாலி ஜூனியர் விகடனுக்கு பேட்டி !

  • முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே செல்லுமாயின் ஒரு கட்டத்தில் முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்படலாம் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி இந்தியாவின் ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு தெரிவித்துள்ளார்.

    அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

    இலங்கையில் முதல் தாக்குதலே முஸ்லிம்கள் மீதுதான் இடம்பெற்றது. 1915-களில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.

    இப்போது புலிகளுடனான யுத்தத்துக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு அனுராதபுரத்தில் உள்ள ஒரு தர்காவை போலீஸார் முன்னிலையில் பௌத்த பிக்குகள் உடைத்தனர்.

    2012-ல் தம்புள்ள எனும் இடத்தில் பள்ளிவாசல் ஒன்று இடிக்கப்பட்டது. இப்போது 10-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களையும் மதரஸாக்களையும் சிங்களவர்கள் உடைத்துள்ளதன் மூலம் தமிழ் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை வெளிப்படையாகவே தொடங்கிவிட்டனர்.

    பர்தா அணிந்து செல்லும் இஸ்லாமியப் பெண்களிடம் அத்துமீறி நடக்கிறார்கள். இராணுவத்தினர் இதைக் கண்டுகொள்வது இல்லை.

    1915-ல் நடந்ததுபோன்ற யுத்தம் இப்போதும் நடத்தப்படுவது தவிர்க்க முடியாதது என்று, ராஜபக்ச ஆதரவு சிங்களக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயா கூறியுள்ளதன் மூலம் அவர்களின் எண்ணத்தை அறியலாம்.

    இந்த யுத்தத்துக்கான ஓர் ஆரம்பமாக இலங்கையில் ஹலால் சான்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களைத் தள்ளிக்கொண்டே போனால், ஒரு கட்டத்தில் நாங்களும் திரும்ப வேண்டியிருக்கும்.

    அப்போது ஆயுதங்களைத் தூக்குவதைத் தவிர வேறுவழி இல்லை. இதைச் சொன்னதற்காக என்னைக் கைது செய்ய வேண்டும் என்று பொதுபல சேனா என்னும் பௌத்த அமைப்பு கூறியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக