வியாழன், ஏப்ரல் 25, 2013

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா மரணம்!

புதுடெல்லி:உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா (வயது80), டெல்லியில் நேற்று(திங்கள்கிழமை) மரணமடைந்தார். கல்லீரல் செயலிழப்பு காரணமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை குர்காவ்னில் உள்ள மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 9.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 1997ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அவர் ஓராண்டு அப்பதவியில் இருந்தார். தில்லியில் கடந்த ஆண்டு மாணவி பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களுக்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டியதற்கான பரிந்துரைகளை அளிக்க ஏற்படுத்தப்பட்ட குழுவுக்கு வர்மா தலைவராக இருந்து, பரிந்துரைகளை அளித்தார்.
1955-ல் வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கினார். மத்தியப் பிரதேச தலைம நீதிபதியாக 1973-ல் நியமிக்கப்பட்டார். 1986-ல் மாநில தலைமை நீதிபதியாகபதவி உயர்வு பெற்றார். 1986 முதல் 1989-ம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநில தலைமை நீதிபதியாக பணியாற்றியுள்ளார். 1989-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகநியமிக்கப்பட்ட அவர் 1997-ல் தலைமை நீதிபதியானார். மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். 1994-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் எஸ்.ஆர். பொம்மை அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது தொடர்பாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்த 9 பேரடங்கிய நீதிபதிகள் அமர்வில் வர்மாவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி வர்மாவின் மரணத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக