செவ்வாய், ஏப்ரல் 23, 2013

சிங்கப்பூருடனான அணுக்கமான உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தோனீசியா- சிங்கப்பூர் பேச்சு !

சிங்கப்பூருடனான அணுக்கமான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் சிங்கப்பூர்  வந்துள்ள இந்தோனீசிய அதிபர் சுசீலோ பம்பாங் யுதயோனோ நேற்று மாலை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்துப் பேசினார். 
 
இரு தலைவர்களின் சந்திப்பில் இரு நாட்டின் அமைச்சர் பேராளர்களும் கலந்து கொண்டனர். கடந்த 2012ம் ஆண்டில் இந்தோனீசியாவின் போகோரில் இரு தலைவர்களும் கடைசியாக சந்தித்துப்பேசினர். அதன் பிறகு ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆராய்ந்தனர். மேலும் 2-010ம் ஆண்டில் இரு தரப்பிலும் அமைக்கப்பட்ட இரு தரப்பு செயற்குழக்களின் முன்னேற்றம் பற்றிய விவரங்களையும் அவர்கள் பறிமாறிக் கொண்டனர்.
 
பாத்தாம்-பிந்தான், கரிமூன் ஆகிய இடங்களில் முதலீடு, பயணத்துறை மேம்பாடு, விமான வழி இணைப்பு, மனித வள மேம்பாடு, பயங்கரவாதத்துக்கு எதிராக போராட்டம் போன்ற செயற்குழுக்கள் அமைக்கப்பட்டன. முன்னதாக அதிபர் டோனி டான் கெங் யாம் வழங்கிய மதிய விருந்து நிகழ்ச்சியில் அதிபர் யுதயோனோ கலந்து கொண்டார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக