இந்திய எல்கைக்குள் சுமார் 19 கிலோ மீட்டர் தொலைவு வரை சீனப் ராணுவப் படைகள் ஊடுருவி கூடாரம் அமைத்து தங்கியுள்ளதாக, நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக நேற்று ஆஜரான பாதுகாப்புத்துறை செயலாளர் சசி காந்த் சர்மா உள்ளிட்ட சில உயரதிகாரிகள், சீனப் படைகள் ஊடுருவல் நடத்திய பகுதிகளில் இந்திய ராணுவம் படைகளை நிறுத்தி வைத்துள்ளதாக விளக்கமளித்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள தவுலத் பேக் ஓல்டி என்ற இடத்தில் சீன ராணுவம் கடந்த வாரம் ஊடுவியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் இதுவரை 2 கொடி அமர்வுக் கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், எந்த ஒரு சுமுக முடிவும் எட்டப்படவில்லை.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக