வியாழன், ஏப்ரல் 25, 2013

மலேசியாவில் தேர்தல் பிரசாரத்தின் போது குண்டு வெடித்தது !

  • மலேசிய தேர்தல் களம் வன்முறைக் களமாக மாறி வருகிறது. கிட்டத்தட்ட 400 வன்செயல் சம்பவங்கள் நடந்திருப்ப தாகவும் பலர் கைது செய்யப்பட்டு வரு வதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
  •  
  • மலேசிய பொதுத் தேர்தலுக்கான இருவார பிரசாரம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அப்போது முதல் நாடெங்கும் வன்செயல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நேற்றுப் போலிசார் தெரிவித்தனர்.

  • அதிர்ச்சி அளிக்கும் விதமாக நேற்று முன்தினம் இரவு பினாங்கில் நடைபெற்ற ஆளும் தேசிய முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. தாமான் ஜாவி ஜெயா என்னும் இடத்தில் இரவு 10.15 மணிக்கு நிகழ்ந்த வெடிப்பில் 35 வயது பாதுகாவல் ஊழியர் ஒருவர் காயமடைந்தார். பினாங்கு கெராக்கான் கட்சியின் தலைவர் டெங் ஹாக் நன், மேடையில் பேசிக்கொண்டிருந்த வேளையில் குண்டு வெடித்தது.
  •  

  • அப்போது அப்பிரசார உரையைச் செவிமடுக்க சுமார் 3,000 பேர் அங்கு திரண்டிருந்தனர். பட்டாசுகளால் அந்த வெடிப்பு நிகழ்ந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், “நேரப்படி வெடிக்கும் குண்டு அது,” என்று ரோஸ்லி சிக் என்னும் உள்ளூர் போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். “இது ஒரு சதிவேலை என்று நான் கருதுகிறேன். இதுபோன்ற செயல்களால் எங்களது பிரசாரத்தை முறியடித்துவிட முடியாது. பிரசாரக் கூட்டம் தடைபடவில்லை. அனைத்துப் பேச்சாளர்களும் பேசினர்,” என்று அம்னோவின் பினாங்குக் கிளைத் தலைவர் ஜைனல் அபிதின் ஒஸ்மான் தெரிவித்தார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக