வெள்ளி, ஏப்ரல் 19, 2013

திட்டமிட்ட தேதியில் கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் !

  • பெங்களூரில் உள்ள பாஜ தலைமை அலுவலகம் அருகே நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 11 போலீஸ்காரர்கள் உள்பட 17 பேர் காயமடைந்தனர். தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது.
    பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புக்கும், மும்பை ஜாவேரி பஜாரில் நடந்த குண்டுவெடிப்புக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.

    குண்டுவெடிப்பு நிகழ்த்தியவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு கர்நாடக போலீஸ் ரூ.5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் குண்டு வெடிப்பை தொடர்ந்து கர்நாடக தேர்தல் தேதி மாற்றப்படும் என செய்திகள் வெளியாயின. இதனை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே திட்டவட்டமாக மறுத்துள்ளார். ‘‘கடந்த காலங்களிலும் இதுபோல் தேர்தலுக்கு முன்பு குண்டுகள் வெடித்துள்ளன.

    அப்போது திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட்டது. அதே போல் இப்போதும் திட்டமிட்ட தேதியில் கர்நாடக தேர்தல் நடத்தப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றார் ஷிண்டே. கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 5ம் தேதி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக