- மலேசியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறவுள்ள 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.
- வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளான இன்று 1,500க்கும் அதிகமான வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் நாளுக்கு முதல் நாள் ஜோகூர் மாநிலத்தில் மட்டும் 754 வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறின. அந்த மாநிலத்தில் மொத்தம் 82 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- இந்த மாநிலத்தில் 26 நாடாளுமன்ற இடங்களுக்கும் 56 சட்டமன்ற இடங்களுக்கும் வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். வேட்பு மனுக்களைப் பூர்த்தி செய்யும்போது தவறுகள் ஏற்படக்கூடும் என்பதற்காக சில வேட்பாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் கூடுதலாக வேட்பு மனுக்களை வாங்கிச் சென்றிருக்கலாம் என்று ஜோகூர் மாநில தேர்தல் ஆணைய இயக்குநர் ரோகியா ஹனும் கூறினார்.
சனி, ஏப்ரல் 20, 2013
மலேசிய பொதுத் தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக