வெள்ளி, ஏப்ரல் 19, 2013

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கைது !

  • பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை, அவரது பண்ணை வீட்டில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மே 11ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. 
  •  
  • துபாயில் தஞ்சம் அடைந்திருந்த முன்னாள் அதிபர் முஷாரப், 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பினார். முன்னதாக பெனசிர் கொலை வழக்கு, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது, நாட்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தது, எமர்ஜென்சி கொண்டு வந்தது, அந்த கால கட்டத்தில் 60க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது போன்ற பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்றிருந்தார்.

    ஆனால், பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள முஷாரப், தேர்தலில் போட்டியிட முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அத்துடன், இஸ்லாமாபாத் உள்பட 4 தொகுதிகளில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் தேர்தலில் முஷாரப் போட்டியிடுவது தடைபட்டது. இந்நிலையில், எமர்ஜென்சி காலத்தில் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்த வழக்கில், ஜாமீனை நீட்டிக்க கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் முஷாரப் மனு தாக்கல் செய்திருந்தார். 
  •  
  • அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து முஷாரப்பை கைது செய்ய உத்தரவிட்டார். அதை கேட்ட முஷாரப் உடனடியாக நீதிமன்றத்தில் இருந்து காரில் ஏறி சென்றார். இஸ்லாமாபாத் புறநகர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்றார். அங்கு விரைந்த போலீசார் வீட்டை முற்றுகையிட்டு கைது செய்தனர். 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக