திங்கள், ஏப்ரல் 29, 2013

பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பு! கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் விடுவிப்பு!

பெங்களூர் பா.ஜ.க அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸ் பிடித்து சென்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் அலியப்பா விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த வியாபாரியான அலியப்பாவை (வயது-28) சில தினங்களுக்கு முன்பு போலீஸ் பிடித்துச் சென்றது. 3 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் விசாரணைச் செய்யப்பட்ட அலியப்பாவிடமிருந்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அவரை விடுவித்தது பெங்களூர் போலீஸ்.
முன்னதாக அலியப்பாவை பிடித்துச் சென்ற தகவலை போலீஸ் குடும்பத்தினரிடமோ, நண்பர்களிடமோ தெரிவிக்கவில்லை. அலியப்பா கடத்தப்பட்டிருப்பார் என்று சந்தேகிப்பதாக உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
கர்நாடாகாவில் மனித உரிமை அமைப்பான அசோசியேசன் ஆஃப் ப்ரொக்டட் சிவில் ரைட்ஸ் பொதுச் செயலாளர் இர்ஷாத் அஹ்மத் தேசாய், அலியப்பா காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பெங்களூர் போலீஸ் அலியப்பாவை விடுவித்தது.
கஸ்டடியில் இருந்து 3 நாட்களும் போலீஸ் தன்னை மனரீதியாக சித்திரவதைச் செய்ததாகவும், வெற்றுத்தாள்களில் கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் அலியப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு-கர்நாடகா மனித உரிமை கமிஷன்களிடம் புகார் அளிக்கப் போவதாகவும் அலியப்பா தெரிவித்தார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக