- மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் போட்டியிடும் பாஹாங் கிலுள்ள பெக்கான் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடவிருந்த 23 வயது மாணவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
- அறிவியல் துறை மாணவரான புக்கைரி சோஃபியன் மாணவர்கள் குழுக்களின் அமைப்புச் சார்பில் போட்டியிடயிருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
- அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலக முடிவு செய்ததாக மலேசிய மாணவர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சஃவான் அனாங் கூறினார்.3
சனி, ஏப்ரல் 20, 2013
நஜிப்பை எதிர்த்துப் போட்டியிடவிருந்த மாணவர் விலகினார் !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக