- குமரி
மாவட்ட பா.ஜ.கவின் மூத்த தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான
எம்.ஆ.காந்தி தாக்கப்பட்ட சம்பவத்தை காரணம் காட்டி, அரசு சொத்துக்களை
சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டு மக்களை பீதிவயப்படுத்தியதன் வாயிலாக
முழு அடைப்பை (22/04/2013) அன்று குமரிமாவட்டத்தில் நடத்தியுள்ளது பாரதீய
ஜனதா கட்சி. நேற்று முன் தினம் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பாரதீய
ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான எம்.ஆர்.காந்தியை அடையாளம் தெரியாத நபர்கள்
சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமுற்ற அவர் தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சைப் பெற்று வருகிறார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து வன்முறைக்காக காத்திருந்த பாரதீய ஜனதா மற்றும் சங்க்பரிவாரத்தினர் அன்றைய தினமே அரசு பேருந்துகள் மீது கல்வீசி சேதம் விளைவித்தனர். இந்நிலையில் நேற்று பாரதீய ஜனதா கட்சி மிரட்டலுடன் விடுத்த முழு அடைப்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடை உரிமையாளர்கள் பீதி வயப்பட்டு கடைகளை மூடியிருந்தனர். சில இடங்களுக்கு பேருந்து சேவை ரத்துச் செய்யப்பட்டது. சங்க்பரிவாரத்தினரின் வன்முறையில் 50 பேருந்துகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாரதீய ஜனதா கட்சியினரின் மிரட்டல் போராட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் 750-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்கள் உடைப்பு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததை தொடர்ந்து தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 300 போலீசார் வரவழைக்கப்பட்டனர். எம்.ஆர்.காந்தி தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி பாரதீய ஜனதா கட்சியினர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்கு வங்கியை பலப்படுத்த குமரி மாவட்டத்தை எப்பொழுதும் பதட்டமாகவே வைக்க திட்டமிட்டிருப்பது நேற்றைய முழு அடைப்பின் மூலம் தெரியவருகிறது.
இதுக் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: "முழு அடைப்பையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று அதிகாலை முதலே போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். ஒருசில இடங்களில் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. பஸ்களை உடைத்ததாக இதுவரை 20 பேர் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம்.
இன்னும் சில பகுதிகளில் அசம்பாவிதங்களில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். எம்.ஆர். காந்தி தாக்கப்பட்ட சம்பவத்திற்கான காரணம் குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில், சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவரை தாக்கியவர்கள் யார்? என்பது பற்றிய அடையாளம் தெரிந்துள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.3
வியாழன், ஏப்ரல் 25, 2013
வன்முறையின் மூலம் மக்களை மிரட்டி முழு அடைப்பை நடத்திய பா.ஜ.க!அரசு பேருந்துகள் சேதம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக