செவ்வாய், நவம்பர் 22, 2011

எஸ்.டி.பி.ஐ சார்பாக சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து தென்சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ-ன் சார்பாக நாளை 22.11.2011 அன்று சென்னை சைதாப்பேட்ட பனகல் மாளிகை அருகே மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட செயலாளர் முஹம்மது சாலிஹ் தெரிவித்துள்ளார்.தமிழக  அரசு பதவியேற்று ஒரு வருடம் கூட முடிவடையாத நிலையில் மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையாலும் பாமர மற்றும் நடுத்தர மக்கள் அவதிப்பட்டு வருகினறனர்.


சமீபத்தில் தமிழக அரசு பால் கட்டணம், பேருந்து கட்டணம், மின் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிப்பட்டு ஆளுகின்ற அதிமுக அரசை வெறுத்து வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ இத்தகைய விலைஉயர்வை வன்மையாக கண்டிப்பதோடு, உடனே விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி நாளை செவ்வாய் கிழமை 21.11.2011 அன்று மாலை சரியாக 4.00 மணி அளவில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளைகை அருகே மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக‌ கலந்து கொள்ள வேண்டுமென கட்சியின் தென்சென்னை செயலாளர் முஹம்மது சாலிஹ் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக