திங்கள், நவம்பர் 21, 2011

இரகசிய தகவல் கசிவு அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதரிடம் விளக்கம் கேட்கும் பாக்.அரசு

haggani
வாஷிங்டன்:பாகிஸ்தான் மீது எடுக்கப்படும் இராணுவ சதி குறித்து அதிபர் சர்தாரி அஞ்சுவதாக வாஷிங்டனுக்கு இரகசிய தகவல் தெரிவித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க, அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்காணி இஸ்லாமாபாத் விரைந்தார்.பாகிஸ்தானிய தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் கடந்த மாதம் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில், அமெரிக்க ராணுவ தலைமை ஜெனரல் மைக் முல்லண்னுக்கு தகவல் அனுப்ப பாகிஸ்தானிய தூதர் ஒருவரிடம் சர்தாரி உதவி கேட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதில் அமெரிக்க திடீர் தாக்குதலில் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதையடுத்து இராணுவத்தை கையகப்படுத்தி விடுமோ என்று சர்தாரி அஞ்சுவதாகவும், இதனால் மக்கள் இதற்கு முன் இல்லாத அளவிற்கு தலைவர்களை விமர்சிப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த இரகசிய தகவலுக்கு விளக்கம் அளிக்குமாறு ஹக்காணியிடம் பிரதமர் யூசுஃப் ராஜா கிலானி அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக